Saturday, October 30, 2021

கல்லூரியில் ஒரு நாள்


நம்ம வாழ்க்கைல மறக்க முடியாத சில மணித்துளிகள் இருக்கும்- ல அந்த மாறி ஒரு பதிவு…


என் கல்லூரியில் என் கடைசி மணித்துளிகள்!!! 💓


என்னோட அதிர்ஷ்டமா என்னனு தெரியல எப்போதுமே கிடைக்காத 60E பஸ் அன்னிக்கு கிடைச்சிது. இப்படி தான் ஆரம்பிச்சது அந்த நாள். எப்போதும் போல கடைசில போய் கடைசி சீட்ல உட்காந்தேன். பாத்தா ear-phones இல்ல எப்படி ஒரு மணி நேரம் கடக்க போறோம்-னு இருந்துச்சு. Instagram, whatsapp scroll பன்னிட்டு இருந்தேன்.


கண்டக்டர் வந்து டிக்கெட் கேட்டப்ப “ஒரு Anna University எவ்ளோ?” (Default dialogue :P)

Rs.19 - உடனே ஒரு Flashback என்னோட 1st year-ல 11ரூபா தான். அம்மா கரெக்ட்டா 50ரூபா தருவாங்க போக 24 வர 24, அதுவே டைரக்ட் பஸ்-னா 13ரூபா save-னு ஒரு அல்ப சந்தோஷம். டிக்கெட் ரேட் கூட மாறிடுச்சு-னு ஒரு புண்சிரிப்பு. Purse- ல காசு எடுக்குறப்ப தான் காலைல அக்கா பையன் கைல கிடைக்க கூடாதுனு மறச்சி வெச்ச ear-phones இருந்துச்சு. ஹப்பாடா பாட்டு கேக்கலாம்.


(இளங்காத்து வீசுதே….)


Anna University-க்கு திரும்புற ரோடு வரப்ப எப்பவும் போல ID-கார்டு எடுத்து மாட்ட வந்தேன். எனக்கு ஒரு பழக்கம். ID போட்டா முடி எடுத்து விட மாட்டேன் முடிக்கு மேலயே தான் இருக்கும். இதை பெருசா நான் நோட் பண்ணது இல்ல , என் friends தான் சொல்லுவாங்க. என்னமோ தெரில இன்னிக்கு என் கை முடிய தூக்கி ID போடா போய்டுச்சு. கடைசி தடவ போடுறோம் நம்ம Style-லேயே போடலாமேனு போட்டேன்.


பஸ்- அ விட்டு இறங்கி நடந்து straight-அ Library போனேன்(5 வருஷத்துல நடக்காத ஒரு விஷயம்). போனதும் library due clear பண்ணனும் சொல்லி ID கார்டு குடுத்தேன். இன்னோரு mam ஒரு register கொண்டு வந்து ID கலெக்டர்-த குடுத்தாங்க.


இது final years no due clear பண்ண தான? (நம்மல தான் சொல்ராங்கனு உதிச்சுது) ஆமாம் mam! 62ரூபா change-ஆ குடுமா. கைல இருந்த எல்லா சில்லறையும் பொருக்கி குடுத்தேன் ஒரு 20ரூபா நாலு 10ரூபா ஒரு ரூபா தான் இருக்கு இந்தாங்க மாம் 10 ரூபா பரவலா இருக்கட்டும்- மானு சொல்லி கைல ஒரு துண்டு சீட்டு குடுத்து இதை CPDEல குடுத்து ID கார்டு surrender பண்ணுமானு சொன்னாங்க. மறுபடியும் ID கார்டு போட்டுகிட்டேன் என் ஸ்டைல்-laye😎.

அப்புறம் ரெண்டு , மூணு Farewell Selfie with ID 😁...


ஒரு வழியா மனச தேத்திகிட்டு CPDE-க்கு போனேன். அங்க ஒரு Uncle Lunch முடிச்சிட்டு வாம்மா Counter-ல ஆள் இல்ல. ஒரு அல்ப சந்தோஷம் அரை மணி நேரம் கிடைச்சிருக்குனு. சரினு Dept போனேன் , விரிச்சோடி இருந்த classroom, EG-ல எட்டி பாத்தா.. நாங்க சாப்பிட்ட lunches, அரட்டைகள் , games அப்டி நிறைய memories.. சோகமா இருக்கும் ஆனா அழுகை வராதுல அப்படி ஒரு moment. அப்டியே வந்த ஒரு ஸ்கூல் பிரண்ட்- அ பாத்தேன் , அப்படியே பேசிட்டே time பாத்தா 2:40 ஐயோ ID கார்டு சப்மிட் னு CPDE போனேன். IDல இருந்த batch-ஆ remove பண்ணிட்டு குடுத்தேன். திரும்ப குடுக்க மட்டங்களானு ஏங்குனேன்.


குடுத்தாங்க……..


Name, Roll No, Card Surrender date போட்ட ஒரு துண்டு சீட்டு.. இத என்ன பண்ணனும்? உனக்கு ஒரு proof.. நீயே வெச்சிக்கோமா…. ரெண்டு மூணு நாள்ல No due form ஜெனெரேட்டாயிடும். Thank you சொல்லிட்டு வெளிய வந்தேன். அப்ப மனசுல இருந்த ஒரு வெற்றிடம் வாழ்க்கைல திரும்ப feel பண்ண கூடாதுனு நெனச்சேன்..


சரினு canteen போனேன்…


போற வழியில ஒரு NSS ஜூனியர் என்ன கா camp வரல? ஒரே fun-ஆ இருந்துச்சு miss பன்னிட்டீங்க நீங்க.. College முடிஞ்சிதா கா? ID கார்டே சப்மிட் பண்ணிட்டேன்டா.. போச்சா னு அவனுக்கு ஒரு சிரிப்பு..


சரினு canteen வந்தேன், அண்ணா ஒரு chicken பிரியாணி, முட்ட பிரியாணி தான்மா இருக்கு. சரினா ஒரு egg பிரியாணி ஒரு juice. வாங்கிட்டு வந்து வாயில வெச்சா அமிர்தம் மாறி இருந்துச்சு(it’s a metaphor daddyyy). என்னமோ தெரில அன்னிக்கு விட்டா வேற என்னிக்குமே சாப்பிட முடியாதுனு ஒரு feeling. சுத்தி முத்தி எல்லா டேபிளையும் பாத்தேன்… ஓராயிரம் நினைவுகள் , கோவங்கள் , ஏக்கங்கள் , சண்டைகள் , அழுகைகள்..


சாப்பிட்டு முடிச்சிட்டு அண்ணா ஜூஸ் pineapple.. Mango தான்மா இருக்கு அதும் கடைசி ரெண்டு glass தான் இருந்துச்சு வாங்கி குடிச்சிட்டு வெளிய வந்து உட்காந்தேன். ஏதோ ஒரு “End of an Era” feeling. சில உறவுகளோடு பேசணும்னு ஒரு ஏக்கம்..




இந்த ஏக்கம் வருத்தத்தோடு என்னோட ஒரு part-அ இங்க விட்டுட்டு புது ஆரம்பத்தை தேடி போனேன்..



"Yaruku epdi lam theriyadhu, aana enaku una pudikum"













கல்லூரியில் ஒரு நாள்

நம்ம வாழ்க்கைல மறக்க முடியாத சில மணித்துளிகள் இருக்கும்- ல அந்த மாறி ஒரு பதிவு… என் கல்லூரியில் என் கடைசி மணித்துளிகள்!!! 💓 என்னோட அதிர்ஷ்ட...